தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆள்சேர்த்த புகாரில் தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் ராயப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, வெட்டுவாங்கேணி, தாம்பரம், வண்டலூர், நன்மங்கலம் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரியில் நாகர்கோவில் இளங்கடை தெற்கு புதுத்தெரு பகுதியில் வசித்து வரும், இமாம் முகம்மது அமீர் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், புதுக்கோட்டையில் ஒரு இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
ஹிஷாப் உத் தஹீரிர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆள்சேர்த்த புகாரின் அடிப்படையில் என்.ஐ.ஏ., சோதனைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமைப்பு ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து சர்வதேச அளவில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ. அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.