
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பக்தி இல்லை; அதெல்லாம் பகல் வேஷம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் திருமங்கலம் கோபால் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து பேசிய தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளித்தது தி.மு.க. ஆட்சி. கடந்த 1967- ஆம் ஆண்டு அண்ணா தலைமையில் அமைந்த தி.மு.க. அரசு சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளித்தது. கடந்த 1967- ஆம் ஆண்டுக்கு முன் சுயமரியாதைத் திருமணங்களை நடத்த முடியாத நிலை இருந்தது.
ரூபாய் 5,500 கோடி மதிப்பில் கோயில் நிலங்கள் தி.மு.க. ஆட்சியில் தான் மீட்கப்பட்டுள்ளன. உண்மையான பக்தி உள்ளவர்கள் தி.மு.க. அரசைப் பாராட்டுவார்கள். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பக்தி எல்லாம் இல்லை; அதெல்லாம் பகல் வேஷம். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உண்மையிலேயே பக்தி இருந்திருந்தால், தி.மு.க. ஆட்சியைப் பாராட்டி இருக்க வேண்டும்.
சரணாலயத்தில் புலி தாக்கியதில் ஊழியர் உயிரிழப்பு!
திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்த சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு அலைக்கின்றனர். தவறான, தேவையற்ற பரப்புரைகளை, பொய் செய்திகளை பரப்பி மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றனர். பொய் செய்தியைப் பரப்பி மக்களைக் குழப்பும் செயலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபடுகிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.