
உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டி மும்பையிலோ, கொல்கத்தாவிலோ நடைபெற்று இருந்தால், இந்திய அணி வென்றிருக்கும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
“2024 ஐ.பி.எல். தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார்”- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு!
மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவில் நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பேசிய அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, “உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் முதல் 10 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தததற்கு, பாவம் செய்த ஒருவர் போட்டியைக் காண வந்தது தான் காரணம்” என்றார்.
இந்திய அணியைக் காவிமயமாக்க பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் காவி நிற உடைந்து அணிந்து போட்டியில் விளையாட நிர்பந்தம் வந்ததாகவும், ஆனால் அதற்கு வீரர்கள் மறுத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். அத்துடன், உலகக்கோப்பை இறுதிப் போட்டி கொல்கத்தா (அல்லது) மும்பையில் உள்ள மைதானங்களில் நடைபெற்றிருந்தால் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என்று கூறினார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி!
முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.