
சென்னையில் நடந்த அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுப்படுத்திவிட்டோம். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தூக்கம் போய்விட்டது. தேசிய கட்சிகளை நம்பி பிரயோஜனம் இல்லை; மக்கள் தான் எஜமானர்கள் மக்களுக்கு எதிரான திட்டங்களை கூட்டணி தர்மம் என தவிர்க்க வேண்டிய சூழல் இனி நமக்கு இல்லை.
மாபெரும் சாம்ராஜ்யத்தை வளைத்துப்போடும் அம்பானி…
மக்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். காங்கிரஸ், பா.ஜ.க. என யார் ஆண்டாலும் தமிழகத்தை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் பார்க்கின்றனர். யார் ஆட்சியில் இருந்தாலும், மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்கியது இல்லை. தமிழகத்தில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு மனிதாபிமானத்தோடு வழங்க வேண்டும்.
தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த போது, மக்களைச் சந்திக்காமல் டெல்லிக்கு சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மக்களைச் சந்திப்பதைவிட இந்தியா கூட்டணியின் கூட்டம் தான் முதலமைச்சருக்கு முக்கியமா? மக்கள் பாதிக்கும் போதெல்லாம் அவர்களுக்கு நேசக்கரம் நீட்டக்கூடிய கட்சி அ.தி.மு.க. தான். மக்கள் பிரச்சனையில் மத்திய அரசைக் குறைக்கூறி தி.மு.க. அரசு தப்பிக்க நினைக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
58 வயதில் 3-வது பட்டம் பெற்ற நடிகர் முத்துக்காளை
இதனிடையே, பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறியதும், அரங்கில் இருந்த தொண்டர்கள் ஆடி, பாடி உற்சாகமடைந்தனர்.