புதிதாக பதவியேற்ற பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அமுல் போன்ற தனியார் நிறுவனங்கள் தமிழக பால் சந்தையில் ஆவின் இடம் போட்டியிட முடியாது. விவசாயிகள் வாடிக்கையாளர்களை கவனத்தில் கொண்டு முக்கிய திட்டங்கள் செயல்படுத்த உள்ளோம். வெயில் காலங்களில் ஆவின் பால் கெட்டுப்போகாமல் இருக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது. தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதில் புதிதாக மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக நேற்று ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொண்டார். ஏற்கெனவே ஐடி துறை அமைச்சராகவும் இரண்டாவது முறையாக பால்வளத்துறை அமைச்சராகவும் இருந்த மனோ தங்கராஜ் தற்போது மீண்டும் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
முன்னதாக தலைமைச் செயலகம் சென்று பணியை துவங்குவதற்கு முன் அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் தொண்டர்களுடன் வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளேன். என்னுடைய அமைச்சர் பணியை நாங்கள் ஆரம்பிக்கின்றேன். வெயில் காலம் என்பதால் ஆவின் பால் சீக்கிரமாக கெட்டுப் போகக் கூடிய சூழல் ஏற்படுகிறது என்பது குறித்த கேள்விக்கு, இந்தத் துறை எனக்கு புதிது அல்ல. முழுமையாக அரும்படியாக உள்ளது. இதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன ஏற்கெனவே முதல்வர் ஆட்சியில் பல்வேறு முக்கிய முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய தேவைகள் அனைத்திற்கும் செயல் திட்டங்கள் உள்ளன. கோடை நேரத்தில் அதை எதிர் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பால்வளத் துறையில் துறையில் இரண்டு முக்கியமான சேவைகள் உள்ளன. விவசாய பெருமக்களுக்கு பால் உற்பத்தி பெருக்குவதற்கு தேவையான நடவடிக்கை மற்றும் அவர்களுக்கு நியாயமான விலை கிடைப்பது போன்றவற்றை வெற்றிகரமாக செய்வது மற்றும் கோடான கோடி வாடிக்கையாளர்கள் நியாயமான முறையில் பால் மற்றும் பால் பொருட்களை வழங்க வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பது போன்ற இரண்டு இலக்குகளை வைத்து திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு இந்த துறையில் இன்னொரு மைல்கள் அடையும் வகையில் நாங்கள் மேம்படுத்தவுள்ளோம்.
அமல் போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் கால் பதிக்கும் பொழுது அவ்வளவு பெரிய விஷயமாக அப்போது பேசப்பட்டது. ஆவின் வலுவான கட்டமைப்பை கொண்டுள்ளது. கட்டமைப்பு விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிகமாக உள்ளனர். நம்மிடம் எளிதாக அவர்கள் போட்டியிட முடியாது. பால் சந்தையை பொருத்தவரையில் யாராலும் ஆக்கிரமிக்க முடியாது. நம் பால் சந்தையை இன்னும் விரிவாக்க இருக்கிறோம். இந்த முறை இன்னும் அதிகமான திட்டங்கள் செயல்படுத்த உள்ளோம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
பத்மஸ்ரீ விருதை வாழ்நாள் சாதனையாளர் விருதாக கருதுகிறேன் – செஃப் தாமு பெருமிதம்!