spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது"- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

“சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

-

- Advertisement -

 

நாங்கள் யார் என்பதை மதுரை மாநாட்டில் நிருபிப்போம் - அதிமுக தொண்டர்கள் உற்சாகம்..
File Photo

இதுவரை ஒரு புயலை கூட சந்திக்கவில்லை. ஆனால் இந்த சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

we-r-hiring

கண் இமை முடி வளர்ச்சிக்கு இதை செய்யுங்கள்!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டதாக மார்தட்டும் விடியா தி.மு.க. அரசின் இரண்டரை ஆண்டு கால ஆட்சி இதுவரை ஒரு புயலை கூட சந்திக்கவில்லை. ஆனால் இந்த சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது. நிர்வாகத் திறனற்ற “திமுக மாடல் ரோடு”, “இரண்டரை ஆண்டு கால விடியா தி.மு.க. ஆட்சிக்கு இதுவே சாட்சி” என்பது போல் இன்று சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி தவிக்கிறது.

மரவள்ளிக்கிழங்கு பாயாசம் செய்வது எப்படி!

விடியா தி.மு.க. அரசின் நிர்வாகச் சீர்கேட்டிற்கு, இந்த சாதாரண மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாத மழைநீர் வடிகால் திட்டமும் அதனால் பரவும் டெங்கு உட்பட பல பருவ மழைக்கால நோய்களால் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதே சாட்சி. மக்களின் துயர் துடைக்க விடியா அரசே நடவடிக்கை எடுக்கும் என்று நம்பாமல், ஆங்காங்கே உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுக என்று கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ