Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பூரில் தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் துரத்தி அடிக்கவில்லை- காவல் ஆணையர்

திருப்பூரில் தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் துரத்தி அடிக்கவில்லை- காவல் ஆணையர்

-

- Advertisement -

திருப்பூரில் தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் துரத்தி துரத்தி தாக்கியதாக பரவி வரும் வீடியோ குறித்த உண்மைத்தன்மை குறித்து மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு தெரிவித்துள்ளார்.

தமிழர்களை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்... ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட  அமைப்புகள்..!

we-r-hiring

திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் உடன் பணிபுரியும் தமிழக தொழிலாளர்களை துரத்தி துரத்தி தாக்குவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இது தொடர்பாக நேரடியாக களத்தில் விசாரிக்கையில் கடந்த 14ஆம் தேதி அன்று பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் இருவர் டீ குடிக்க வெளியே சென்ற போது அங்கு மதுபோதையில் இருந்த தமிழக இளைஞர்களுடன் சிகரெட் புகை ஊதியது தொடர்பாக வாக்குவாதம் எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் தமிழக இளைஞர்கள் வடமாநில தொழிலாளர்களை தாக்கியதாகவும் அதன் பின்னர் டீ இடைவெளிக்கு வெளியே வந்திருந்த வடமாநில தொழிலாளர்கள் தமிழர்களை தாக்க துரத்தியதும் தெரியவந்தது.

அந்த சமயத்தில் 15 வேலம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். காவலர்களை கண்டதும் தமிழக இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பி உள்ளனர்.

போலீசார் அந்த பகுதியில் விசாரித்த போதும் புகார் கொடுக்க யாரும் இல்லாததால் வழக்கு பதிவு செய்ய முடியாமல் இந்த சம்பவத்தை கைவிட்டனர். சில நிமிடங்களில் நடந்து முடிந்த இந்த சம்பவம் 12 நாட்களுக்கு பிறகு நல்ல பகுதியில் இருந்த நபரால் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Workers Clash Video; Don't believe rumours Tirupur Police Commissioner  Praveen Kumar Abhinav | 'வடமாநில இளைஞர்கள் மோதல் வீடியோ; வதந்திகளை  நம்பவேண்டாம்' - திருப்பூர் காவல் ஆணையர் ...

இது தொடர்பாக பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் அதன் உண்மைத்தன்மை குறித்து பேசிய திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு கூறுகையில், திருப்பூர் மாநகரில் தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதாக தவறான செய்தி பரவி வருகிறது. இரண்டு நபர்கள் டீ குடிக்க சென்ற போது ஏற்பட்ட பிரச்சனை. இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. யாருக்கும் காயமோ? பாதிப்போ இல்லை. இதனை இன்று நடைபெற்றது போல தவறாக சித்தரித்து பரப்பி உள்ளனர். சமூக வலைத்தளங்களை கண்காணித்து வருகிறோம்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இரண்டு தனிப்படை அமைத்துள்ளோம். ஒரு தனிப்படை சம்பவம் மற்றும் அதில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றொரு தனிப்படை சமூக வலைதளங்களில் தவறாக தகவல் பதிவிட்டவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். யாரும் இந்த சம்பவம் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

MUST READ