
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எல்.எல்.ஏ-வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவையொட்டி, அந்தத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்தத் தொகுதியில் பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கிய நிலையில், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய இரு கட்சிகளும் களம் காண்கின்றன. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட மற்ற பிரதான கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இதில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சந்திரக்குமாருக்கே வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளின் ஆதரவு மற்றும் அந்தக் கட்சியினரின் ஓட்டுக்கள் யாருக்கு கிடைக்கப்போகும் என்கிற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை, அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற 05-02-2025 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மா.கி.சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் நிறைஞர் (M.A, M.Phil.,) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,
நாம் தமிழர் உறவுகளும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் – 2025
வேட்பாளர் அறிவிப்புவருகின்ற 05-02-2025 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மா.கி.சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் நிறைஞர் (M.A, M.Phil.,)… pic.twitter.com/h3gYgpkfiY
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) January 14, 2025