
அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் வெற்றி பெற்றதுச் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சாலையில் கொப்பளித்து ஓடிக்கொண்டிருக்கும் கழிவு நீர் கால்வாய் – பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி!
அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கடந்த 2021- ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, பொய் வாக்குறுதி அளித்ததாகவும், 60 கோடி ரூபாய் அளவுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்றதாகவும், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வேதரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து தானியங்கி சமிக்ஞைகள்
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று (டிச.22) காலை 11.00 மணிக்கு இவ்வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்துள்ளது. அதில், கடந்த 2021- ஆம் ஆண்டு வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க.வின் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றதுச் செல்லும் எனத் தெரிவித்துள்ளார்.