spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஒடிசா ரயில் விபத்து - மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை

ஒடிசா ரயில் விபத்து – மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை

-

- Advertisement -

ஒடிசா ரயில் விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார்.

ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், அரசுத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

ஒடிசா ரயில் விபத்து - மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை

we-r-hiring

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்று இரவு 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகிய இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார்.

ஒடிசா ரயில் விபத்து - மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், அரசுத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பது, காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது, மருத்துவ உதவிகள் தொடர்பாக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசிக்க உள்ளார்.

MUST READ