spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக அளித்த தி.மு.க. எம்.பி.க்கள்!

ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக அளித்த தி.மு.க. எம்.பி.க்கள்!

-

- Advertisement -

 

 

we-r-hiring
ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக அளித்த தி.மு.க. எம்.பி.க்கள்!
Photo: TN GOVT

தங்களது ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரண நிதிக்காக தி.மு.க. எம்.பி.க்கள் 30 பேர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.

“நம்பிக்கை துரோகத்தால் விஜயகாந்திற்கு உடல்நல பாதிப்பு”- தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை இன்று (டிச.16) காலை 11.00 மணிக்கு தி.மு.க.வின் பொருளாளரும், கட்சியின் மக்களவைக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையிலான மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் சந்தித்தனர்.

சிபிசிஎல் ஆலையில் தீ விபத்து!

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 30 தி.மு.க மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகைக்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினார்கள். இந்த நிகழ்வின் போது, எம்.பி.க்கள். கனிமொழி, திருச்சி சிவா, வில்சன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

MUST READ