நெல், கரும்புக்கான ஆதார விலை உயர்வு அறிவிப்பு: “யானைப்பசிக்கு சோளப்பொறியா?” என விவசாயிகள் கொந்தளிப்பு!
110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்த சலுகைகள் ஏமாற்று வேலை – கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தல்!
தமிழக சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அறிவித்த நெல், கரும்பு ஆதார விலை உயர்வு மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்புகள் அனைத்தும் விவசாயிகளையும் பொதுமக்களையும் ஏமாற்றும் செயல் என கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதியும்… தற்போதைய அறிவிப்பும்:
தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.பயிர் அறிவிப்புதேர்தல் வாக்குறுதிதற்போதைய 110 விதி அறிவிப்புசன்னரக நெல் (குவிண்டால்)₹3,500₹2,750பொதுரக நெல் (குவிண்டால்)₹3,500₹2,600கரும்பு (டன்)₹4,500₹4,000
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
பஜெட் மற்றும் தற்போதைய அறிவிப்புகளில் தவெக அரசு பின்வரும் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளைப் புறக்கணித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
மகளிர் உரிமைத் தொகை: 60 வயதுக்குட்பட்ட அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ₹2,500.
இலவச சிலிண்டர்: ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்.பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS):அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தல்.இளைஞர் நல நிதி: வேலை தேடும் பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000.
பணி நிரந்தரம்: 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம்.
பாதுகாப்பு & நீதி: பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ‘அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றங்கள்‘.கண்டனக் குரல்:”ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை முழுமையாக நிறைவேற்றக் கோரி மாநிலம் முழுவதும் விவசாயிகள் போராடி வரும் சூழலில், முதலமைச்சரின் இன்றைய அரைகுறை அறிவிப்பு ‘யானைப்பசிக்கு சோளப்பொறி’ அளிப்பது போல் உள்ளது. அளித்த வாக்குறுதியின்படி நெல் குவிண்டாலுக்கு ₹3,500 மற்றும் கரும்பு டன்னுக்கு ₹4,500 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
பயிர்க்கடன் முழு தள்ளுபடி: பேரவையில் திமுக வலியுறுத்தல் – அரசு தரப்பு விளக்கம்
