spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஉம்மன் சாண்டி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

உம்மன் சாண்டி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

-

- Advertisement -

 

உம்மன் சாண்டி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Photo: TN Govt

கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி (வயது 79) உடல்நலக்குறைவுக் காரணமாக, பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (ஜூலை 18) அதிகாலை 04.25 மணியளவில் உயிரிழந்தார்.

we-r-hiring

அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

இந்த நிலையில், அவரது உடல் தலைவர்களின் அஞ்சலிக்காக, கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஜான் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் கர்நாடகா மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் உம்மன் சாண்டியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆர்.எஸ்.பாரதி மனுத் தள்ளுபடி!

அதேபோல், தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், உம்மன் சாண்டியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து, உம்மன் சாண்டியின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.

MUST READ