
வரத்துக் குறைந்ததால் ஊட்டி மலைப் பூண்டின் விலை அதிகரித்துள்ளது.
‘SK21’ படத்தின் டைட்டிலை முடிவு செய்த படக்குழு?…. வெளியான புதிய தகவல்!
வெளிமாநிலங்களில் இருந்து வரும் பூண்டின் வரத்துக் குறைந்ததால் தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் ஊட்டி மலைப் பூண்டின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இமாச்சலப்பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் பூண்டை தமிழகத்திற்கு இறக்குமதி செய்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பூண்டின் விலை அதிகரித்திருந்த நிலையில், நீலகிரியில் சாகுபடி செய்யப்பட்ட மலைப் பூண்டு அறுவடைக்கு தயாராகி வருகிறது.
கூடுதல் ருசி மற்றும் மனம் கொண்ட மலை பூண்டுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் ஊட்டி பூண்டின் வரத்து குறைந்தே காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது தரத்திற்கு ஏற்றார் போல் கிலோவுக்கு 400 ரூபாய் முதல் 600 ரூபாய்க்கு பூண்டு விற்பனை செய்யப்படுகிறது. பூண்டின் விலை உச்சம் தொட்டதால் விற்பனையும் மந்தமடைந்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
காக்கி சட்டை பட இயக்குனருடன் கைகோர்க்கும் நயன்தாரா…… ஷூட்டிங் எப்போது?
அறுவடைத் தொடங்கும் போது மலைப் பூண்டின் விலை படிப்படியாகக் குறைய வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.