முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
கடந்த 2001- 2006 அ.தி.மு.க. ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.72 கோடி சொத்து சேர்த்ததாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2012- ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் விடுதலைச் செய்திருந்தது.
இந்த நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கிறார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை விரைவில் எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் உரிமை தொகை: ஆவடியில் வீடு வீடாக சென்று விவரங்கள் சரிபார்ப்பு
ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து, விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.