கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் மேலும் 2 தொகுதிகளில் போட்டி
கர்நாடக தேர்தலில் மேலும் 2 தொகுதிகளுக்கு ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் மே 24ம் தேதிக்குள் தேர்தலை முடிக்க வேண்டும் என்ற விதிமுறையால், ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மே மாதம் 10ம் தேதி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மே 13ம் தேதி அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 224 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில், மொத்தம் 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இந்நிலையில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி, புலிகேசி நகரில் தனது வேட்பாளரை அறிவித்தது. அந்த வேட்பாளரை எதிர்த்து ஓபிஎஸ் சார்பில் நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தர்போது கோலார் தங்க வயல் தொகுதியில் அனந்தராஜ், காந்தி நகரில் குமார் போட்டியிடுவார் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடையும் நிலையில், மேலும் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புலிகேசி நகர், கோலார், காந்தி நகர் தொகுதிகளில் ஓ.பி.எஸ். வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.