
கடலியல் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு உடல் நலக்குறைவால் காலமானர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் பங்கேற்பதில் சிக்கல்!
கடலியல் வரலாற்று ஆய்வாளரான ஒரிசா பாலு, கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் மாரடைப்புக் காரணமாக ஒரிசா பாலு காலமானார். அவருக்கு வயது 60.
யார் இந்த ஒரிசா பாலு? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
கடந்த 1963- ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம், உறையூரில் பிறந்தவர் ஒரிசா பாலு. இவர் தமிழ் மீதும், ஆய்வுகள் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டவர். தமிழ் தொன்மையை உலகளவில் கடல் வழியாகத் தேடி வந்தவர். இயற்பியலில் நன்கு நுண்ணறிவு கொண்ட ஒரிசா பாலு, ஒடிசா மாநிலத்தில் பல ஆண்டுகளாக பொறியியல் துறையில் கருவிகளைப் பழுதுப் பார்க்கும் பிரிவில் பணியாற்றி வந்தார்.
ஆசிய விளையாட்டு- ஹாக்கியில் இந்தியாவுக்கு தங்கம்!
மத்திய அரசின் கனிமவளங்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றிய ஒரிசா பாலு, தமிழ் மொழி மீதான ஈர்ப்பு காரணமாக, தமிழ் மொழி குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, புத்தகங்களாக வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


