Homeசெய்திகள்தமிழ்நாடுகொள்முதல் நிலையங்களுக்கு வெளியே கிடைக்கும் நெல் மூட்டைகள்!

கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே கிடைக்கும் நெல் மூட்டைகள்!

-

 

கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே கிடைக்கும் நெல் மூட்டைகள்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்புக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படாமல் எந்தவித பாதுகாப்புமின்றி வெளியே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணி சாதனை வெற்றி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில் 28 நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்ட இடத்திலேயே அடுக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் 15 நாட்களாக எந்த பாதுகாப்புமின்றி கிடப்பதால் கோடை மழை பெய்தால் நெல் மூட்டைகள் நீரில் நனைந்து வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 20 நாட்களாக விவசாயிகளுக்கு நெல்மூட்டைகளுக்கான பணம் கொடுக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

பிளே ஆப் வாய்ப்பை உறுதிச் செய்தது ராஜஸ்தான் அணி!

இது தொடர்பாக, தேசிய நுகர்வோர் கூட்டுறவு அமைப்பின் மேலாண்மை இயக்குநர் கூறுகையில், தேர்தலையொட்டி, சொந்த ஊர்களுக்கு சென்ற ஊழியர்கள் திரும்பி வந்ததும் நெல் மூட்டைகள் சேமிப்புக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படும் என்று உறுதியளித்தார்.

MUST READ