spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு"- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு!

“பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு!

-

- Advertisement -
"பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு"- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு!
Video Crop Image

ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது தொடர்பான சென்னையில் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “சமவேலைக்கு சமஊதியம் கோரிக்கையை ஆய்வுச் செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ரூபாய் 10,000 முதல் ரூபாய் 12,500 வரை பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும்.

சிலிண்டர் விலை மேலும் 100 ரூபாய் குறைப்பு!

we-r-hiring

மூன்று பேர் குழு தங்களது பரிந்துரைகளை மூன்று மாதங்களில் அரசுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும்; ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, அரசின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை; எனவே போராட்டம் தொடரும் என பகுதி நேர ஆசிரியர்கள் குழு அறிவித்துள்ளது.

MUST READ