spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசிலிண்டர் விலை மேலும் 100 ரூபாய் குறைப்பு!

சிலிண்டர் விலை மேலும் 100 ரூபாய் குறைப்பு!

-

- Advertisement -

 

Gas-Cylinder

we-r-hiring

உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மேலும் 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : தயாராகாத மைதானங்கள்..

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் 100 ரூபாயைக் குறைக்க ஒப்புதல் கொடுக்கப்பட்டது. அண்மையில் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும், 100 ரூபாய் விலைக் குறைக்கப்பட்டது. இது பொதுமக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த சிலிண்டர் விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தெலங்கானா மாநிலத்தில் பழங்குடியினருக்கு பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உலகக்கோப்பைக்கான ஐ.ஐ.சி. சர்வதேச தூதரக சச்சின் நியமனம்!

தெலங்கானாவில் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு, முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

MUST READ