Homeசெய்திகள்தமிழ்நாடுசாகித்திய அகாதமி விருது பெற்ற மூத்த கவிஞர் புவியரசு மறைவு - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி...

சாகித்திய அகாதமி விருது பெற்ற மூத்த கவிஞர் புவியரசு மறைவு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆழ்ந்த இரங்கல்!

-

- Advertisement -

​தமிழ் படைப்புலகின் தலைசிறந்த ஆளுமையும், வானம்பாடி இயக்கத்தின் தூண்களில் ஒருவருமான மூத்த கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் புவியரசு (96) கோவையில் இன்று (ஜூன் 30, 2026) காலமானார். அவரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் அறிக்கை வெளியிட்டுள்ளது.சாகித்திய அகாதமி விருது பெற்ற மூத்த கவிஞர் புவியரசு மறைவு - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆழ்ந்த இரங்கல்!

​இது குறித்து சிபிஐ (CPI) மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள இரங்கல் செய்தி அறிக்கை,

we-r-hiring

​கவிஞர் புவியரசுவின் வாழ்வும் சாதனைகளும்
​ஆரம்பகால வாழ்க்கை: உடுமலைப்பேட்டை அருகே உள்ள லிங்கவநாயக்கன்புதூரில் பிறந்த புவியரசு, பின்னர் கோவையில் குடியேறினார். கோவை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், பேரூர் தமிழ்க் கல்லூரியில் “தமிழ் வித்துவான்” பட்டமும் பெற்றவர். முப்பது ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி, ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.

கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழ் உலகிற்குத் தந்துள்ளார். பாரதியின் கனவுக்கு இணங்க, பிறமொழிச் சாத்திரங்கள் மற்றும் இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தனி முத்திரை பதித்தவர். திரைப்படத் துறையிலும் வசன கர்த்தாவாகப் பணியாற்றியுள்ளார். இவரது அரிய தமிழ்ப் பணிக்காக, தமிழ் படைப்பு மற்றும் மொழிபெயர்ப்பு என இரண்டு பிரிவுகளில் உயரிய ‘சாகித்திய அகாதமி’ விருதைப் பெற்றுள்ளார். தமிழில் புதுக்கவிதை மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ‘வானம்பாடி இயக்கம்’ உருவாவதில் முதன்மைப் பங்காற்றியவர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்துடன் என்றும் நீங்காத் தோழமை உறவு கொண்டிருந்தவர்.

​ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு
​கவிஞர் புவியரசுவின் மறைவு, தமிழ் படைப்புலகிற்கும், குறிப்பாக மொழிபெயர்ப்புத் துறைக்கும் எளிதில் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். ​அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரளான படைப்புலக நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

தருமபுரியில் பயங்கரம்: மனைவி, மகளைக் கொன்றுவிட்டு லாரியின் முன் குதித்து குடும்பத் தலைவர் தற்கொலை!

MUST READ