spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபவள விழா - முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

பவள விழா – முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

-

- Advertisement -

தமிழினத் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்!
Photo: DMK

திமுக பவள விழா – முப்பெரும் விழா இன்று சென்னையில நடைபெறுவதையொட்டி கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், நான்தான் திராவிடன் என்று நவில்கையில் தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!” – எனப் பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ்நிலமெங்கும் வீச, தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்வதாக தெரிவித்துள்ளார்.

we-r-hiring
CM Stalin
Photo: TN GOVT

தமிழுக்கு ஒரு இன்னலென்றால் தடுத்து நிறுத்தத் தம்பிமார் படை உள்ளதென்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள உடன்பிறப்புகளானோம் நாம்! என்றும், ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்! என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழினத் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்! என்றும், இன்று மாலை பவள விழா – முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ