spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅழுக்கு உடைன்னா தீயேட்டரில் அனுமதி இல்லையா ? களத்தில் இறங்கிய அதிகாரிகள்

அழுக்கு உடைன்னா தீயேட்டரில் அனுமதி இல்லையா ? களத்தில் இறங்கிய அதிகாரிகள்

-

- Advertisement -

அழுக்கு உடைன்னா தீயேட்டரில் அனுமதி இல்லையா ? களத்தில் இறங்கிய அதிகாரிகள்
உடையை காரணம் காட்டி திரையரங்கில் படம் பார்க்க அனுமதிக்காததால் நரிக்குறவர் இன மக்கள் 30 பேர் கடலூர் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நரிக்குற இன மக்கள் கடலூரில் உள்ள நியூ சினிமா திரையரங்கில் கருடன் சினிமா பார்ப்பதற்காக சென்று உள்ளனர். அப்போது திரையரங்கு ஊழியர்கள் உடையை காரணம் காட்டி அவர்களை திரையரங்குக்குள் அனுமதிக்காததால் அவர்கள் கடலூர் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளிப்பதற்காக  திரண்டு சென்றுள்ளனர்.

we-r-hiring

அழுக்கு உடைன்னா தீயேட்டரில் அனுமதி இல்லையா ? களத்தில் இறங்கிய அதிகாரிகள்

கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருந்த நரிக்குறவ இன மக்களிடம் வட்டாட்சியர் பலராமன் மற்றும் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் அவர்களின் மனுவை பெற்றுக்கொண்டு திரையரங்கு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் தற்போது அவர்கள் படம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்து அவர்களை திரையரங்குக்கு செல்லுங்கள் என்று தெரிவித்தனர்.

அழுக்கு உடைன்னா தீயேட்டரில் அனுமதி இல்லையா ? களத்தில் இறங்கிய அதிகாரிகள்

பின்னர் வட்டாட்சியர் பலராமன்  தனது அரசு வாகனத்திலேயே நரிக்குறவர்களை திரையரங்கிற்கு படம் பார்க்க அழைத்து சென்றுள்ளார்.

MUST READ