Homeசெய்திகள்தமிழ்நாடு"மக்களை நோக்கி அரசு அலுவலகங்கள் செல்ல வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“மக்களை நோக்கி அரசு அலுவலகங்கள் செல்ல வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

 

"மக்களை நோக்கி அரசு அலுவலகங்கள் செல்ல வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (பிப்.16) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அத்துடன், கால்நடை, நீர்வளம், வேளாண்மை ஆகிய துறைகளில் தேர்வான 1,598 இளைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

செய்யாறு சிப்காட் விரிவாக்கம்….பொது வாக்கெடுப்பு நடத்த தயாரா? – அன்புமணி கேள்வி

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பல்வேறு துறைகள் சார்ந்து பெறப்பட்ட 3.50 லட்சம் மனுக்கள் மீது தீர்வுக் காணப்பட்டுள்ளன. மக்களிடம் செல், மக்களோடு வாழ் என்பதே எங்களுக்கு கற்றுத்தரப்பட்ட பாதை. ஆட்சியில் இல்லாத போது மக்களுக்காகப் போராடுவோம்; ஆட்சிக்கு வந்த பின் மக்கலுக்காகத் திட்டங்கள் தீட்டுவோம்.

அரசின் சேவைகளை மக்கள் பெறுவதில் உள்ள தாமதத்தை நீக்கவே மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சேவைகளைப் பெற அலையத் தேவையில்லை என்ற சூழலை உருவாக்கியுள்ளோம். மக்களை நோக்கி அரசு அலுவலகங்கள் செல்ல வேண்டும் என்பதற்காகவே மக்களுடன் முதல்வர் தொடங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பம் பெறுவதற்கான தேதி அறிவிப்பு

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ