Homeசெய்திகள்தமிழ்நாடுகருப்பு நிற கவுன் அணிவதிலிருந்து விலக்கு தரக் கோரி மனு

கருப்பு நிற கவுன் அணிவதிலிருந்து விலக்கு தரக் கோரி மனு

-

கருப்பு நிற கவுன் அணிவதிலிருந்து விலக்கு தரக் கோரி மனு

தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம்! – வழக்கறிஞர்கள் கருப்பு நிற கவுன் அணிவதால் வெப்ப பாதிப்புகளை சந்திக்கலாம் என்பதால் கருப்பு நிற கவுன் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கருப்பு நிற கவுன் அணிவதிலிருந்து விலக்கு தரக் கோரி மனு

கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. வெப்பம் 115 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ள நிலையில் வெப்பத்தினால் வட மாநில மக்கள் பெரிய அளவில் பாதித்து வருகிறார்கள். இந்த சூழலில் நீதிமன்றங்களுக்கு வழக்கு விசாரணைகளில் ஆஜராக கருப்பு நிற கவுண் அணிந்து வழக்கறிஞர்கள் வருவதால் அவர்கள் வெப்ப பாதிப்புகளை எதிர் கொள்ள நேரிடுகிறது.

எனவே வெப்பத்தின் அளவு குறையும் வரை வழக்கறிஞர்கள் கறுப்பு நிற கவுன் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி சைலேந்திர மணி திரிபாதி என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து வெப்ப அலை வீசுவது அதிகரித்து வருவதால் தனது மனுவை விரைந்து விசாரித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவை தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் கோரி உள்ளார்.

கருப்பு நிற கவுன் அணிவதிலிருந்து விலக்கு தரக் கோரி மனு

வழக்கறிஞர்கள் கறுப்பு நிற கவுன் அணிவது பிரிட்டிஷரின் பாரம்பரியம் எனவும், இந்தியாவின் கால நிலையை கருத்தில் கொண்டு கவுன் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.

MUST READ