Homeசெய்திகள்தமிழ்நாடுபிரதமர் நரேந்திர மோடி வருகை....சென்னையில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

பிரதமர் நரேந்திர மோடி வருகை….சென்னையில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

-

 

ஏப்ரல் 29 ஆம் தேதி காசி தெலுங்கு சங்கமத்தில் பிரதமர் மோடி

பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 04) தமிழகம் வருகிறார்.

சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வே

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் நாளை (மார்ச் 04) மதியம் 02.45 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகிறார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கல்பாக்கம் செல்லும் பிரதமர், பிற்பகல் 03.30 மணி முதல் மாலை 04.15 மணி வரை கல்பாக்கம் ரியாக்டர் மேம்பாடு திட்டத்தைப் பார்வையிடுகிறார்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலைய ஹெல்பேட் தளத்திற்கு வந்து சாலை மார்க்கமாக நந்தனம் பொதுக்கூட்டத்திற்கு செல்லவுள்ளார். அதைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து தெலங்கானா மாநிலத்திற்கு செல்கிறார்.

மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைது

பிரதமரின் வருகையொட்டி, சென்னையில் 15,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், பிரதமரின் வருகை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக வரும் ஏப்ரல் மாதம் 29- ஆம் தேதி வரை சென்னையில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து பெருநகர சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி ட்ரோன்களைப் பறக்கவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

MUST READ