spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபாமக போராட்டத்திற்கு அனுமதிக்க உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் 

பாமக போராட்டத்திற்கு அனுமதிக்க உத்தரவிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் 

-

- Advertisement -

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பாமக சார்பில் வள்ளுவர் கோடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாமகவின் எழுச்சியும் வீழ்ச்சியும் - என்.கே.மூர்த்தி

we-r-hiring

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் பாமக சார்பில் சௌமியா அன்புமணி தலைமையில்  மகளிர் அணியினர் போராட்டம் நடத்த இருப்பதாக கூறி நுங்கம்பாக்கம் காவல்துறையிடம் மனு அளித்தனர். இந்த போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி வழங்க மறுத்தவிட்டனர். இதனை தொடர்ந்து, பாமக போராட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி அக்கட்சியின் கட்சி சார்பில் வழக்கறிஞர் பாலு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு முறையீடு செய்தார்.

செட்டில்மென்ட் ஆவணம் பதியமறுத்த பதிவாளர் ஆஜராக ஆணை

அப்போது, பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்த நீதிபதி பி.வேல்முருகன், போராட்டம் நடத்தும் ஒவவொருவரும் முதலில் தங்கள் மனதில் கைவைத்து கூறுங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று. இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் இந்த விவகாரத்தை அனைவரும் அரசியலாக்கி வருவதாக தெரிவித்த நீதிபதி, இந்த விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரம் போராட்டம் நடத்துவதற்கான ஏற்புடையது அல்ல என்றும் தெரிவித்தார்.

வெறும் விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள். இந்த சமூகத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு இருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.

MUST READ