பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 25-ஆம் தேதி தைலாபுரத்தில் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நாளை மறுநாள் (25.01.2023) புதன்கிழமை காலை 10.00 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தையடுத்த தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
