- Advertisement -
பொங்கல் பரிசு தொகுப்பினை கண் கருவிழி மூலம் வழங்கலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் ரொக்க பணமாக ரூபாய் 3000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி கடந்த 8ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
வயதானவர்கள் முதியவர்களுக்கு கைரேகை சரிவர விழாததால் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. கண் கருவிழி முறையும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் கண் கருவிழி மூலம் பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகம் செய்யலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


