Homeசெய்திகள்தமிழ்நாடு"பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 1,000 ரொக்கம் வழங்குக"- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

“பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 1,000 ரொக்கம் வழங்குக”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

-

 

நாங்கள் யார் என்பதை மதுரை மாநாட்டில் நிருபிப்போம் - அதிமுக தொண்டர்கள் உற்சாகம்..
File Photo

பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 1,000 ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

“அதானி குழுமக் குற்றச்சாட்டை செபி அமைப்பே விசாரிக்கும்”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்காத தி.மு.க. அரசைக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். தி.மு.க. அரசு பொங்கல் தொகுப்பை மட்டுமே அறிவித்துள்ளதாகவும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கமாக ரூபாய் 1,000 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மற்றும் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வசிக்கும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 5,000 வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு!

மேலும், கச்சா எண்ணெய் பரவி வாழ்வாதாரம் பாதித்த எண்ணூர் பகுதி மக்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 5,000 வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அத்துடன், பொங்கல் தொகுப்புக்காக வழங்கப்படும் கரும்புகளை எவ்வித முறைகேடும் இன்றி விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.

MUST READ