அதானி குழுமத்தின் மீதான வழக்கை பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான ‘செபியே’ விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
“பொங்கல் பரிசுத் தொகையுடன் ரூபாய் 1,000 வழங்க ராமதாஸ் கோரிக்கை!”
அதானி குழுமம் தனது நிறுவனங்களின் பங்கு விலைகளை முறைகேடாக உயர்த்தியதாக ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் மத்திய அரசு, அதானி குழுமம், செபி உள்ளிட்ட அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று (ஜன.03) காலை 11.00 மணிக்கு தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், “22 புகார்களில் 20 புகார்கள் மீதான விசாரணையை செபி முடித்துவிட்டது; அதானி குழுமத்தின் மீதான வழக்கை பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும். வழக்கின் விசாரணையை செபியிடம் இருந்து மாற்ற எந்த அடிப்படையும் இல்லை. விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 40 குறைவு!
அத்துடன், மீதமுள்ள இரண்டு வழக்குகளின் விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க செபிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் அமைத்த ஆறு பேர் கொண்ட குழு அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.