spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"பொன்முடி வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை"- உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி!

“பொன்முடி வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை”- உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி!

-

- Advertisement -

 

we-r-hiring

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மிரட்டல், பூச்சாண்டிகளுக்கு திமுக பயப்படாது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோரை விடுவித்து, கடந்த ஜூன் மாதம் வேலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை தாமாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

இன்று (ஆகஸ்ட் 10) பிற்பகல் 03.00 மணிக்கு வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடேஷ், “அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், மிக மோசமான முறையில் விசாரணை நடைபெற்றுள்ளது. இதன் காரணமாகவே, வேலூர் நீதிமன்ற வழக்கு தொடர்பாக, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

“மின்சாரத்தின் இருண்ட முகம்” அறிக்கை – தாமாக முன்வந்து விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்

அதைத் தொடர்ந்து, தாமாக எடுத்த வழக்கை தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்க பதிவுத்துறைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். வழக்கு தொடர்பாக, வரும் செப்டம்பர் 07- ஆம் தேதிக்குள் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.

MUST READ