Homeசெய்திகள்தமிழ்நாடுநிலவில் பிரக்யான்-பூமியில் பிரக்யானந்தா- இஸ்ரோ தலைவர் பெருமிதம்

நிலவில் பிரக்யான்-பூமியில் பிரக்யானந்தா- இஸ்ரோ தலைவர் பெருமிதம்

-

பிரக்ஞானந்தாவை இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேரில் சந்தித்து பாராட்டினார்

உலகப்கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை இஸ்ரோ தலைவர் சோம்நாத் சென்னை பாடியில் உள்ள வீட்டில் நேரில்  சந்தித்து பாராட்டி சந்திரயான் மினியேச்சர் மாடலை பரிசாக வழங்கினார்.

நிலவில் பிரக்யான்-பூமியில் பிரக்யானந்தா- ஸ்ரோ தலைவர் பெருமிதம்பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ள  இஸ்ரோ தலைவர் சோம்நாத், சென்னை பாடியில் உள்ள  செஸ் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவை அவரது வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து உலகக்கோப்பை போட்டியில் அவரின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டி சிறிய அளவிலான சந்திரயான் மாதிரியை பரிசளித்தார்.

நிலவில் பிரக்யான்-பூமியில் பிரக்யானந்தா- ஸ்ரோ தலைவர் பெருமிதம்பின்னர் இதுகுறித்து பேசிய சோம்நாத், “பிரக்ஞானந்தாவின் சாதனையால் நாம் அனைவரும் பெருமையடைகிறோம். சதுரங்கம் இந்தியாவில் தொடங்கிய விளையாட்டு.  நிலவில் பிரக்ஞான் இருப்பதற்காக பெருமை கொள்கிறோம். பூமியில் இந்த பிரக்ஞானந்தா இருக்கிறார். நிலவில் நாம் என்ன சாதித்தோமோ, அதை இவர் நிலத்தில் சாதித்திருக்கிறார்” என்று தெரிவித்தார்.!

நிலவில் பிரக்யான்-பூமியில் பிரக்யானந்தா- ஸ்ரோ தலைவர் பெருமிதம்இந்த சந்திப்பு குறித்து பிரக்ஞானந்தா கூறுகையில், “இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை சந்தித்ததில் பெருமிதம் அடைகிறேன். எனது பயணம் மற்றும் பயிற்சி குறித்து விவாதித்தோம். ராக்கெட் தயாரிக்கப்படும் திருவனந்தபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு வருமாறு என்னை அழைத்துள்ளார். விரைவில் அங்கு செல்ல உள்ளேன்” என்று கூறினார்.

MUST READ