திமுக – அதிமுக கூட்டணி என்ற யூகங்களுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது என திமுக எம்.பி. கனிமொமி தெரிவித்துள்ளாா்.
திமுக – அதிமுக கூட்டணி குறித்த யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுக்கு பிந்தைய அரசியல் சூழல் குறித்து அவர் அளித்த பேட்டியில், ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பே மிக முக்கியமானது என்றும், அதற்கு திமுக முழு மரியாதை அளிப்பதாகவும் கூறினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல்வேறு அரசியல் கூட்டணிகள் மற்றும் ஆதரவு தொடர்பான யூகங்கள் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகின்றன. குறிப்பாக, திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, “யூகங்களுக்கு எல்லாம் எங்களால் பதில் சொல்ல முடியாது” என்று தெரிவித்தார்.
மேலும், அதிமுகவினர் கூறும் ஒவ்வொரு கருத்துக்கும் திமுக பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். திமுக மீது நேரடியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால் அதற்கு உரிய பதில் அளிக்கப்படும் எனவும் கூறினார். தேர்தல் முடிவு என்பது மக்களின் தீர்ப்பு. அது தெளிவான தீர்ப்பாக இல்லாவிட்டாலும், ஜனநாயகத்தில் அந்த தீர்ப்புக்கு மதிப்பளிப்பதே முக்கியம், என்று கனிமொழி வலியுறுத்தினார்.
“அசாதாரண சூழலை கையாளுவதில் தடுமாறிப் போயிருக்கிறாரா விஜய்” – சிந்தனைச் செல்வன் கேள்வி
