Homeசெய்திகள்தமிழ்நாடுஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் - விஜய்க்கு ஆளுநர் பதில்

ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் – விஜய்க்கு ஆளுநர் பதில்

-

- Advertisement -

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றிப்பெற்ற விஜய்க்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பு விடப்படும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் - விஜய்க்கு ஆளுநர் பதில்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் களத்தில் அதிக தொகுதிகளில் வெற்றிப்பெற்ற கட்சிக்கு அழைப்பு விடுத்து பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். இதுதான் ஆளுநரின் கடமை. தவெக தலைவர் விஜய்யும் தொடர்ந்து 2 முறை கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் ஆளுநர் அலட்சியமாக நடந்து கொள்கிறார்.

இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன், இடதுசாரி தலைவர்கள், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் போன்ற தலைவர்கள் ஆளுநரின் செயல்பாட்டை கண்டித்துள்ளனர்.

we-r-hiring

இந்தியாவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு இன்று (07.05.2026) சென்னை ராஜ் பவனுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு நேரில் வந்த விஜய்யிடம்
தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை ஆதரவு இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதை மாண்புமிகு ஆளுநர் விளக்கிக் கூறினார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் ஆட்சிக்கு 6 மாதங்களுக்கு தொந்தரவு செய்ய மாட்டோம் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

 

MUST READ