spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு

-

- Advertisement -

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அண்மையில் பரிந்துரைத்திருந்தது. இதனை ஏற்று 5 கூடுதல் நீதிபதிகளையும் சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி மற்றும் கே.ஜி.திலகவதி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

we-r-hiring
சென்னை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா- மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார் குடியரசுத் தலைவர்!
Photo: President Of India

இதேபோல், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஷமீம் அகமது, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் காலியிடங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது.

MUST READ