பந்திப்பூர், முதுமலை புலிகள் காப்பகங்களை பிரதமர் பார்வையிட்டார்
பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பந்திப்பூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகங்களை பார்வையிட்டார்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்ற அவர், அங்குள்ள யானை பாகர்கள் மற்றும் பாதுகாவலர்களுடன் கலந்துரையாடினார். முகாமில் யானைகளுக்கு உணவளித்தார். ஆஸ்கார் விருது பெற்ற ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள யானைக் காவலர்களுடனும் பிரதமர் உரையாடினார்.

இதுகுறித்து டிவிட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அதில், “இயற்கையான பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் காலை நேரத்தைக் கழித்தேன். இந்தியாவின் வனவிலங்குகள், இயற்கை அழகு மற்றும் பன்முகத்தன்மையை கண்டு களித்தேன்.”
“பந்திப்பூர் புலிகள் காப்பகத்திலிருந்து இன்னும் சில காட்சிகள்.” என்று படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. “முதுமலை புலிகள் காப்பகத்தில் கம்பீரமான யானைகளுடன்.” என வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
A special day, in the midst of floral and faunal diversity and good news on the tigers population…here are highlights from today… pic.twitter.com/Vv6HVhzdvK
— Narendra Modi (@narendramodi) April 9, 2023
“அற்புதமான பொம்மனையும் பெல்லியையும், பொம்மி மற்றும் ரகுவுடன் சந்திப்பதில் எத்துணை மகிழ்ச்சி.” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.