Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டப்பேரவையில் பட்ஜெட் மீது இன்று பொது விவாதம்!

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீது இன்று பொது விவாதம்!

-

 

"பயிர்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பரிசு....கன்னியாகுமரியில் சூரியத்தோட்டம்"- சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (பிப்.21) பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. மேலும் 12 திருத்த மசோதாக்கள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளன.

பிரபல வில்லன் நடிகருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு?

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 12- ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் (பிப்.19) 2024- 2025 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டும், நேற்று (பிப்.20) வேளாண் பட்ஜெட்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், பட்ஜெட் மீதான விவாதம் இன்று (பிப்.21) நடைபெறவுள்ளது. முன்னதாக, தமிழ்நாடு ஊராட்சித் திருத்த மசோதா, தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் திருத்த மசோதா, தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள், சட்டங்கள் திருத்த மசோதா, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட மசோதா உள்ளிட்டவைத் தாக்கல் செய்யப்படவுள்ளன.

உறியடி விஜய் குமாரின் அடுத்த படம்….. ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு நிதி ஒதுக்க மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிமுகம் செய்யவிருக்கிறார்.

MUST READ