spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபுதுச்சேரி மாநில த.வெ.க நிர்வாகி சரவணன் மறைவு - விஜய் இரங்கல்

புதுச்சேரி மாநில த.வெ.க நிர்வாகி சரவணன் மறைவு – விஜய் இரங்கல்

-

- Advertisement -

புதுச்சேரி மாநில த.வெ.க நிர்வாகி சரவணன் மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளராக இருந்தவர் சரவணன். இவர் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்று வரும் கட்சியின் மாநாட்டுப் பணிகளை பார்வையிட்டு வீடு திரும்பியபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சரவணன் மறைவு த.வெ.க நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

we-r-hiring

இந்த நிலையில், த.வெ.க நிர்வாகி சரவணன் மறைவுக்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, தன் மீதும் தமது தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக்கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி சரவணன் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

த.வெ.க தலைவராக மாணவர்களை சந்திக்கும் விஜய்.... இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி!

மேலும், சரவணனை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.

MUST READ