
பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பெண்ணைக் கத்தியால் குத்திய நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு செல்வதற்காக பெருங்களத்தூர் ரயில் மேடையில் நின்றுக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை, ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் காயமடைந்த அந்த பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அந்த பெண்ணுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், உடல்நலம் தேறியதைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது, அந்த பெண் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இது குறித்த புகாரில், ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பேரில், வண்டலூர் அருகே சுப்பிரமணி என்பவரை கைது செய்தனர். அவர் சாய்பாபா கோயிலில் புதிய வாகனங்களுக்கு பூஜை போடுபவர் என்பது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
கருணாநிதி நினைவுத் தினம்- அமைதி பேரணி தொடங்கியது!
பெண்ணை கத்தியால் குத்தியதற்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


