Homeசெய்திகள்தமிழ்நாடுமழை வெள்ளப் பாதிப்பு- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு!

மழை வெள்ளப் பாதிப்பு- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு!

-

- Advertisement -

 

மழை வெள்ளப் பாதிப்பு- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு!
Photo: ANI

தூத்துக்குடியில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

அனிமல் படத்தின் வசூல் குறைவுக்கு காரணம் இதுதான்… தயாரிப்பாளர் விளக்கம்…

கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையில் தூத்துக்குடி மாவட்டம் பெரியளவில் பாதிக்கப்பட்டது. குடியிருப்புகள், முக்கிய சாலைகள், அரசு அலுவலகங்கள் என பல தரப்பிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், தூத்துக்குடியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற அவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். அப்போது, தூத்துக்குடி தொகுதியின் மக்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் உடனிருந்தனர்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரஜினிகாந்த்… வேட்டையன் படப்பிடிப்பு தீவிரம்…

வெள்ளத்தின் போது, ஏற்பட்ட பாதிப்புகளின் புகைப்பட ஆவணங்களைக் காட்டி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளும் மத்திய நிதியமைச்சரிடம், இழப்பு விவரங்களை எடுத்துரைத்தனர்.

MUST READ