
குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற முக்கிய பிரமுகர்களுக்காக மட்டுமே திறக்கப்படும் ஆளுநரின் விருந்தினர் மாளிகை, தமிழக வரலாற்றில் முதல்முறையாக ஏழை மாணவியின் குடும்பம் தங்குவதற்காக திறக்கப்பட்டது கவனத்தை ஈர்த்துள்ளது.
கேமிங் டிசைனராக நடித்துள்ள வெற்றி… அசத்தல் சைக்கலாஜிக்கல் த்ரில்லர்!
தமிழக அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியரை, ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அழைத்துக் கலந்துரையாடினார். ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சிக்காக, தென்காசி மாவட்டம், கடைய நல்லூரில் இருந்து மாணவி ஷப்ரீன் இமானா, பெற்றோருடன் சென்னை வந்தார்.
ராஜ்பவனில் குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற மிக முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையில், தங்க வைக்கப்பட்டார். விதிமுறைப்படி, இங்கே தனிநபர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை என்று ராஜ்பவன் அதிகாரிகள் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

ஏழை கூலித் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த மாணவி, தமிழ் வழியில் கல்வி பயின்று பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்ததற்காக, விதிமுறைகளைத் தளர்த்துவதில் தவறே இல்லை என்று ஆளுநர் தெரிவித்த பிறகே, மாணவியின் ஷப்ரீன் இமானா குடும்பத்துக்காக, ராஜ்பவனில் உள்ள விருந்தினர் மாளிகைத் திறக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ரீரிலீஸ் ஆகும் ரஜினியின் இண்டஸ்ட்ரி ஹிட் படம்!
ஷப்ரீன் இமானா கூறுகையில், “ஆளுநர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டது மகிழ்ச்சி; யாரும் தங்க முடியாத இடம் என சொன்னார்கள். சொந்த ஊரில் இருந்து சென்னை வரும் செலவையும் ராஜ்பவன் ஏற்றது” எனத் தெரிவித்துள்ளார்.