spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅரைநூற்றாண்டுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகராக திகழும் ரஜினி… TTV தினகரன் புகழாரம்…

அரைநூற்றாண்டுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகராக திகழும் ரஜினி… TTV தினகரன் புகழாரம்…

-

- Advertisement -

திரைத்துறையில் 50 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் அன்பிற்குரிய நண்பர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளர் TTV தினகரன் கூறியுள்ளாா்.அரைநூற்றாண்டுக்கும் மேல் உச்ச நடிகராக திகழும் ரஜினி… TTV தினகரன் புகழாரம்…மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது, ”அபூர்வ ராகங்கள் தொடங்கி நாளை வெளியாக இருக்கும் கூலி திரைப்படம் வரை மூன்று தலைமுறை ரசிகர் பட்டாளத்தைத் தக்கவைத்து அரைநூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகராகத் திகழும் நண்பர் ரஜினிகாந்த் அவர்களின் 50 ஆண்டு கால திரைப்பயணம் பல்வேறு அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் உள்ளடக்கியது.

திரைப்படத்தில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கலைப்பயணம் மேன்மேலும் சிறக்க வேண்டும் என்பதோடு ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி நாளை வெளியாக இருக்கும் கூலி திரைப்படம் மாபெரும் வெற்றியடைய மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்” என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளர் TTV தினகரன் கூறியுள்ளாா்.

தேர்தல் ஆணையத்தை கண்டித்து புறக்கணிப்பு போராட்டம் – செல்வப்பெருந்தகை

we-r-hiring

 

MUST READ