ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையத்தை அமைப்பதற்கு மத்திய அரசு ஏதேனும் முன்மொழிந்து உள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே சிங். 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட “உடான்” திட்டத்தின் கீழ் தேவைக்கு ஏற்ப நகரங்களை இணைக்க கூடிய வகையில் விமான சேவைகள் நடைபெற்று வருகிறது. உடான் திட்டத்தின் கீழ் மூன்றாவது சுற்று ஏலத்தில் ராமநாதபுரத்தில் உள்ள கடலோர காவல் படைக்கு சொந்தமான விமானத்தளத்தை உடன் திட்டத்தின் கீழ் செயல்படுத்த மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி ராமநாதபுரத்தில் இருந்து சென்னை இணைக்க கூடிய வகையில் உடான் திட்டத்தின் கீழ் விமானத்தை இயக்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இத்திட்டம் அறிவிக்கப்பட்ட 180 நாட்களுக்குள் அல்லது விமான நிலையம் தயாராகி இரண்டு மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு விமான நிறுவனம் விமானத்தை இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
