spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ராமர் கோயில் திறப்பு'- கோயில்கள், மண்டபங்களில் நேரலைச் செய்யலாம்"- உயர்நீதிமன்றம் உத்தரவு!

“ராமர் கோயில் திறப்பு’- கோயில்கள், மண்டபங்களில் நேரலைச் செய்யலாம்”- உயர்நீதிமன்றம் உத்தரவு!

-

- Advertisement -

 

we-r-hiring

ராமர் கோயில் திறப்பை தனியார் கோயில்களில் நேரலை செய்ய காவல்துறையினர் அனுமதி தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எல்.இ.டி. திரைகள் அகற்றம்- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்!

தனியார் மண்டபத்தில் ராமர் கோயில் திறப்பை நேரலை செய்ய அனுமதி மறுத்த காவல்துறையினரின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, “ராமர் கோயில் திறப்பை தனியார் கோயில்களில் நேரலை செய்ய காவல்துறையினருக்கு அனுமதி தேவையில்லை. ராமர் கோயில் திறப்பை நேரலை செய்யவோ பூஜைகள், செய்யவோ காவல்துறையினர் அனுமதி தேவையில்லை. ஒருவேளை கூட்டம் அதிகரித்தால், அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம். அறநிலையத்துறை கோயில்களில் பூஜை செய்ய கோயில் செயல் அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். நேரலை மற்றும் பூஜை செய்ய உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதி அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து ஏற்றம் காணும் தங்கம் விலை – கவலையில் இல்லத்தரசிகள்!

அத்துடன், வழக்கையும் முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் கோயில்களில் ராமர் கோயில் திறப்பை நேரடி ஒளிபரப்பு செய்ய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

MUST READ