Homeசெய்திகள்தமிழ்நாடுஎல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் கைது!

-

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த 14ம் தேதி 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். பலத்த சூறைக்காற்று எச்சரிக்கை காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 18ம் தேதி முதல் 5 நாட்களுக்கும் மேலாக கடலுக்கு செல்லாமல் இருந்தனர். இதனைத்தொடர்ந்து மீனவர்கள் ஐஸ் கட்டி, மீன்பிடி உபகரணங்களை படகுகளில் ஏற்றி மீன்பிடி தொழிலுக்கு செல்ல ஆயத்தமாகினர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இரவு 10 மணியளவில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அந்த நேரம் இரண்டு பெரிய ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் திடீரென ராமேஸ்வரம் மீனவர்களின் மூன்று படகுகளையும் சுற்றிவளைத்தனர்.

தொடர்ந்து அதிலிருந்த 22 மீனவர்களையும் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்து அவர்களுடைய 3 படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து இன்று கரை திரும்பிய மீனவர்கள் தரப்பில் கூறப்பட்டதாவது, இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் கடலில் சரிவர மீன்பிடி தொழிலில் ஈடுபடாமல் கரை திரும்பினோம். இதனால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என இவ்வாறு மீனவர்கள் தரப்பில் கூறினர்.

 

MUST READ