Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்!

தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்!

-

 

தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்!

தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று (ஏப்ரல் 10) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

பா.ஜ.க. நிர்வாகி வீட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனை!

ஈகை திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையினை கோவையில் உள்ள இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினரான ஜா கமிட்டியினர் கொண்டாடி வருகின்றனர். கோவை குனியமுத்தூரில் நடைபெற்ற சிறப்பு ரம்ஜான் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது புத்தாடைகள் அணிந்து வந்த இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ஒன்று கூடி தொழுகையில் ஈடுபட்டனர்.

இதேபோல், நாகை, தஞ்சை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

தமிழகத்தில் வெயில் குறைய வாய்ப்பு!

இதனிடையே, பிறை தென்படாததால் ரம்ஜான் பண்டிகை நாளை (ஏப்ரல் 11) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.

MUST READ