Homeசெய்திகள்தமிழ்நாடு"500 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும்"- அமைச்சர் பெரிய கருப்பன் பேட்டி!

“500 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும்”- அமைச்சர் பெரிய கருப்பன் பேட்டி!

-

 

"500 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும்"- அமைச்சர் பெரிய கருப்பன் பேட்டி!
File Photo

தக்காளி விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூபாய் 130 முதல் ரூபாய் 170 வரையும், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 200 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சைக்காலஜிக்கல் திரில்லரில் நடிக்கும் கயல் ஆனந்தி….. லேட்டஸ்ட் அப்டேட்!

தக்காளி விலை உயர்வு தொடர்பாக, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், இன்று (ஜூலை 31) அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரிய கருப்பன், “தமிழகம் முழுவதும் நாளை (ஆகஸ்ட் 01) முதல் 500 நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும். 300 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனைச் செய்யப்பட்ட நிலையில், கூடுதலாக 200 நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்யப்படும்.

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் டிரைலர் அப்டேட் லோடிங்!

தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் நோக்கில், நியாய விலைக்கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் சராசரியாக, 10 முதல் 15 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளைச்சல் மற்றும் வரத்துக் குறைவால் தக்காளி விலை அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ