வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
![]()

வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்படுகிறது. அதன்படி ரெப்போ வட்டி விகிதல் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் தனிநபர், வீடு, வாகன கடன்களின் வட்டி விகிதம் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து ஆறாவது முறையாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் 4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் ஓராண்டுக்குள் 2.5 சதவீதமாக உயர்த்தப்பட்டு 6.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
