அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆபாசக் காட்சிகள்- ஓடிடி, இணையதளங்கள் முடக்கம்!
தமிழகத்தில் உள்ள அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு வரும் மார்ச் 28- ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தகுதியுடைய விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் வாயிலாக ஏப்ரல் 29- ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- என்னென்ன பரிந்துரைகள்?
உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வை வரும் ஆகஸ்ட் 04- ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், நேர்முகத் தேர்வு தேதி பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.